ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையை அகற்றி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்பதால் பெண் காவல்துறையினர் மற்றும் காவலர்கள் இணைந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், மகாத்மா காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் எஸ்.ஜோதிமணியை கைது செய்யும் போது அடக்குமுறையை கையாண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும்போது தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு விரோதமான அடக்குமுறையை ஏவிவிடுகிற காட்சியாகவே தமிழக ஆட்சியாளர்களை கருதவேண்டிருக்கிறது. எனவே ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…