அவர் எங்கே போட்டியிடுகிறாரோ நான் அங்க எதிர்த்து நிற்கிறேன் – நமச்சிவாயம் சவால்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட தயார் என நமச்சிவயம் சவால் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம். புதுச்சேரி ஆளுநரை நேரில் சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். இவருடன் சேர்ந்து நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சானும் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட தயார் என நமச்சிவயம் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதல்வர் நாராயணசாமி எந்த தொகுதியில் போட்டியிடுறீங்க என்று துணிச்சலா சொல்ல முடியுமா? உங்களை எதிர்த்து போட்டியிட நான் தயார். புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாராயணசாமி தெரிவிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை சந்திப்பதற்கே நீங்கள் பின்புறமாக வந்தவர்கள் என விமர்சனம் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025