நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன்…!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தல் நடக்குமா..?நடக்காத..? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது.
மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கசிந்து வரும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திடீர் சந்திப்பு நடைபெற்றது . அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பு ஓய்வதற்குள் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.