இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கலைஞரையும் பாமக நிறுவனர் ராமதாஸையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.
முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக தொடக்க முதலே பல போராட்டங்கள் நடத்தி, தமிழ்நாட்டிற்கு பல மாற்றங்களை கொண்டுவந்தார்.
அந்த அடிப்படையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களையும், கலைஞர் கருணாநிதி அவர்களை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன். தனக்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும் தான் இருக்கின்றார் என கலைஞர் தெரிவித்ததாக கூறினார். அவரை எங்கு சந்தித்தாலும் என் மீது மிகுந்த பாசத்துடன் நடந்துகொள்வார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர் என புகழாரம் சூட்டினார். நிச்சயமாக நாம் கலைஞர் கருணாநிதி அவர்களை போற்றுவோம் என கூறினார்.