முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பலரும் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உழவர் திருநாளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது முதல்வர் பழனிசாமி பயிர் கடன்களை தள்ளுபடி செய்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…