அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற பிரார்த்தனை செய்தேன் – எல்.முருகன்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் தான் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது. குறிப்பாக முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணடமடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்.மேலும் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025