காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்

காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘விருதுநகர் – எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாரா வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025