தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன்.! முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி.!

Default Image
  • விஜய் படங்களை நானே ரசித்து பார்த்திருக்கிறேன் என்றும், தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும் என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது என தெரிவித்தார். அதன்பிறகு டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி குறித்து பேசிய அவர், டெல்லி தேர்தலை பற்றி பார்க்கும் போது கடந்த தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது என கூறினார். இதையடுத்து நடிகர் விஜயை பற்றியும் நெய்வேலியில் நடந்த பாஜக போராட்டம் பற்றியும் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது வழக்கமான நடைமுறைதான்,எங்களுக்கும் விஜய்க்கும், எந்த பகையும் இல்லை என குறிப்பிட்டார். மேலும், நெய்வேலி சுரங்க ஆலைக்கு யார் சென்றாலும், கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபோன்ற இடத்தில சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா படப்பிடிப்பிற்கு மத்திய மந்திரியைக் கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது எனவும், மற்றபடி விஜய் படங்களை நானே ரசித்து பார்த்திருக்கிறேன் என்றும், தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன் என தெரிவித்தார். பின்னர் அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்