ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா? தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பகையும் கிடையாது – முக ஸ்டாலின்

Default Image

அதிமுக ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சவால் விடுத்துள்ளார். 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று பூந்தமல்லி நசரத்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முக ஸ்டாலின், திமுக சூரசம்காரம் செய்துவிடும் என்று முதல்வர் பழனிச்சாமி பயப்படுகிறார். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக மக்கள் அதைத்தான் செய்யப்போகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்ல பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் வாழ்கைகைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல்தான் வரும் சட்டமன்ற தேர்தல் என்று மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

அவர்களை விமர்சிப்பது தனிப்பட்ட முறையில் அல்ல, முதல்வர், துணை முதல்வர்கள் மீது தனிப்பட்ட முறைகள் எனக்கு விரோதம், எந்த பகையும் கிடையாது. அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தவறானது, ஆட்சி சுயநலமானது. அதனால் எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன். அவர்களை அகற்றிவிட்டு, தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சியை அமைக்க உங்கள் முன்னாள் உறுதி ஏற்றுள்ளேன். வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்கள் கவலைகளை தீர்ப்பதில் நான் முதல்வனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய பட்டம் எனக்கு தேவையா? இந்த சமுதாயத்திற்காக உழைத்தவன் நான், என்னுடைய உழைப்பின் மூலமாக இனம், நாடு, மக்கள், இளைஞர்கள், பெண்கள் அனைத்து சமூக மக்களும் பயனைடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதி மொழியை அளிக்கிறேன் என்று பேசியுள்ளார். மேலும், திமுக நடவடிக்கையை துவங்கியதுனாலயே ஆரணி எழிலரசி என்பவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கியது அரசு. அதிமுக ஐடி பிரிவு நிரூபிக்க தயாரா என சவால் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்