நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து வீரவணக்கம் செலுத்துகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தாய்த்திரு நாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக குன்னூர் சென்ற அவர், நேற்று இரவு 9 மணிக்கு அங்கு உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு சென்று, எம்ஆர்சி மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஹெலிகாப்டர் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது இரங்கல் குறிப்பை பதிவு செய்தார். அதில் ‘தாய்த்திரு நாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்’ என எழுதியிருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025