நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. நான் யாரையும் இதுவரையில் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் இதை தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்ய நினைத்தவர்கள் வரவில்லை:
மதிமுக கூட்டங்களில் சமீபகாலமாக பங்கேற்காத சில நிர்வாகிகள் தேர்தலுக்கு முன் அதிமுகவோடு கூட்டணி வைக்க சொன்னார்கள். திமுகவோடு புரிதலோடு ஐக்கியமாக இயங்கி வரும் சமயத்தில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக தெரிவித்தார். கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தவர்கள், கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்கள் தான் இன்றைய பொதுக்குழுவுக்கு வரவில்லை. என்னோடு இவ்வளவு காலம் பயணித்த சில நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என கூறினார்.
இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…