நான் சொல்றதா ஆந்திர முதல்வர் செயல்படுத்துகிறார் – சீமான்
நான் சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் செயல்படுத்துகிறார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக தான் பதவி ஏற்ற நாள் முதலே அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்.வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டார்.அவர்களும் பதவி ஏற்றனர்.மேலும் ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,நான் சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் செயல்படுத்துகிறார்.ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன் .நான் சொன்னது போல் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளார்.
மேலும் மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன் என்றும் சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர் என்று கூறினார்.