பெரியப்பாவாக சொல்கிறேன், ஒழுங்காக படி – ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் அறிவுரை.!

Default Image

பெரியப்பாவாக சொல்கிறேன் அரசியலிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தனக்கு அறிவுரை வழங்கியதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அப்போது எம்ஜிஆர் மற்றும் ஸ்டாலின் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை மக்களிடம் காண்பித்து, நானும் எம்ஜிஆரும் சேர்ந்து இருக்குற போட்டோ என்று கூறி, இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று ஒரு பெண்மணி என்னிடம் கேட்டார்.

அப்போ நான் சொன்னேன், 1971-ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் தலைமையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்றது திமுக. அப்போது கலைஞர் கூறினார், நான்தான் ஒழுங்காக படிக்காமல் போயிட்டேன். நீனும் இதே வேலையாக இருக்க கூடாது. ஒழுங்கா படிக்கணும் என்று அறிவுரை கூறினார் கலைஞர்.

இதையடுத்து நிறைவு விழா நாடகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கலைஞர் ஸ்டாலினிடம் அறிவுரை கூறியுள்ளேன் என்று மேடையில் தெரிவித்தார். அடுத்து எம்ஜிஆர் உரையாற்றியபோது, உங்க அப்பா இப்படி சொன்னார். ஆனால் நான் உங்க அப்பாவா இல்ல, பெரியப்பாவாக இருந்து சொல்கிறேன், ஒழுங்கா படித்து, அதே நேரத்தில் எந்த அளவுக்கு நீ அரசியலில் ஆர்வத்துடன் இருக்கியோ அதையும் நீ ஒழுங்கா கவனிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எனக்கு அறிவுரை கூறினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இப்போ எம்ஜிஆரை பற்றி முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். என்றைக்காவது முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் முகத்தை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா? எம்ஜிஆர் குறித்து எதாவது கேள்விப்பட்டிருக்கிறாரா? இன்னைக்கு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதால் அவர்கள் பெயர்களை கூறிக்கொண்டு வருகிறார்கள் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்