நான் எந்த தவறும் செய்யவில்லை என தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 19 ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். மேலும் உயிரிழந்த மாணவி எழுதி வைத்த கடிதத்தில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி யார் என தெரியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன் எழுதி வைத்த கடிதத்தில் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள்.
ஆனால், நான் தவறேதும் செய்யவில்லை. எனவே எனக்கு அவமானமாக இருக்கிறது, வாழ ஆசை இல்லை. இன்று காலை வந்தவுடன் மாணவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நன்றாக படியுங்கள். மிஸ் யூ ஆல் என உருக்கமாக கடிதத்தில் எழுதியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…