தமிழையும், தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் மக்களையும் நேசிக்கிறேன் – பிரதமர் மோடி உரை!
சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது என ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் உரை.
சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை, பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின், சென்னையில் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திரமோடி.
இவ்விழாவில் பேசியபிரதமர், நான் தமிழையும், தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னையையும் நேசிக்கிறேன். திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார். தமிழகத்தில் கதாநாயகனாக வரவேற்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கம் உணர்த்துகிறது.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தமிழாக இளைஞர்களுக்கு ராமகிருஷ்ணா மடம் வழிகாட்டுகிறது. ராமகிருஷ்ணா மடம் செய்து வரும் சேவைகள் அளப்பறியவை. பெண்கள் ஒவ்வொரு நாளும் தடைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்தது வருகின்றனர். தொழில் முனைவோராக இருந்தாலும், விளையாட்டு, ராணுவம், உயர்க்கல்வி என அனைத்துதிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
மேலும், விவேகானந்தர் விட்டு சென்ற பணியை, இவ்வளவு ஆண்டுகளாக சுயநலம் இல்லாமல் ராமகிருஷ்ணா மடம் செய்து வருகிறது. எனவே, தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழி மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும், சென்னை நகரின் மீதும் எனக்கு அதீத ஈடுபாடு உண்டு எனவும் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.