“தமிழ்நாடு அரசு பாட புத்தகம்;மத்திய அரசு என்பதற்கு பதில் இனி இவை இடம் பெறும்” – ஐ.லியோனி..!

Published by
Edison

தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில்,பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி அவர்கள் பதவி வகித்தார்.

இதனையடுத்து,தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்,கல்வியியல் பணிகள் மற்றும் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில்,ஐ.லியோனி அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”வருகின்ற 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில்ஒன்றிய அரசு’ என அச்சிடப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான “கலைமாமணி” விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago