அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி அவற்றை கொடுக்கும் பணிகள் இன்று முதல் நடந்து வருகிறது. இதையடுத்து, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்பு தரும் விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உடைந்து விட்டது என மதுரையில் மு.க.அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதன் விளைவு போகப் போக தெரியும். அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும். மு.க.அழகிரி நிலைப்பாடு என்ன என்பது போகப் போகத் தெரியும். அணுமின்நிலைய தேர்வு மையத்தை மும்பையில் வைத்தது குறித்து வெங்கடேசன் எம்.பி பிரதமருக்கு கடிதம் எழுதி அவர் அழுத்தம் கொடுத்துள்ளது போல, நாங்களும் தேர்வு மையம் தமிழகத்தில் அமைய முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…