பாலமுருகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது.
சென்னை அருகே உள்ள தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், அருணகிரி நாதர் தெருவில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி, அவரது கடைக்கு வெள்ளை நிற சட்டை அணிந்த டிப்டாப்-ஆக இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பலமுருகனிடம், ‘நீங்கள் தீபாவளி பட்டாசு கடையை உரிமை இல்லாமல் நடத்தி வருகிறீர்கள். அதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் மொட்டை கடிதத்தை வேறு வேறு பெயரில் எழுதி தொல்லை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரௌடிகள் எல்லாரையும் எனக்கு தெரியும். எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் இந்த பிரச்னையை விட்டுவிடுவேன்.’ என்று கூறி அவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாலமுருகன் இது தொடர்பாக பீர்க்கன்காரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வில், பணம் கேட்டு மிரட்டியவர், பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், அவர் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. பின் போலீசார் ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் ஜெயராமன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…