திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் – ராஜீவ் காந்தி
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி திமுகவில் முக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார் ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கட்சின் தலைவர் சீமானுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. ராஜீவ் காந்தி திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இணைந்தார். இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி, மாநில உரிமை, மதச்சார்பின்மை, சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்னும் கருத்தியலில் உறுதியாக நின்று சமூகநீதி,மாநில உரிமை,
மதச்சார்பின்மை,சனாதன எதிர்ப்பு என்னும் அரசியலோடு திராவிட கருத்தியலின் முகவரியாய் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இனைத்து கொண்டேன்! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DrSenthil_MDRD pic.twitter.com/VvhN3gaWIH— இராஜீவ் காந்தி Rajiv gandhi (@rajivgandhilaw) January 28, 2021