விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன் – முதல்வர் பழனிசாமி
விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன் என்று முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவு.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிகுறியின்றி கொரோனா இருப்பதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை விஜயகாந்திற்கு வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை சென்றபோது லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. உடனடியாக அதை சரிசெய்யப்பட்டு, தற்போது பூர்ண குணமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன் என்று முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர், பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.