உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் – துணை முதல்வர் ட்வீட்
அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் – துணை முதல்வர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், அதில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம் சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 27, 2020