“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” – அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

annamalai

சென்னை : மத்திய அரசு மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அதற்கான திட்டத்தின் வேளைகளில் ஒரு பக்கம் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த வாதங்களை அடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித்தீர்மானமானது அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Read More –டங்ஸ்டன் சுரங்கம் : அனல் பறந்த விவாதம்! ஆவேசமான இபிஎஸ் – மு.க.ஸ்டாலின்!

இந்த சூழலில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட நான் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி என்னிடம் உறுதி அளித்துள்ளார்” என அண்ணாமலை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்