எனக்கு இரு கண்கள் ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி – அர்ஜுன மூர்த்தி

Default Image

எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள் என்று ரஜினி தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பேட்டி.

நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இவரது அறிவிப்பு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினி புதிதாக தொடங்கருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியனை நியமிக்கப்பட்டது.

இதையடுத்து, ரஜினியின் புதிய கட்சிக்காக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர் தமிழருவி மணியனை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ‘நான் போகிறேன் வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினி தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, உடல் நலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு என ரஜினியின் முடிவை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகும் ரஜினியின் முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ரஜினியுடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி விரும்பியது உண்மை. மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கவில்லை. ரஜினியின் மக்கள் சேவையில் உடனிருப்பேன். ரஜினியின் முடிவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராடவும் வேண்டாம். பாஜகவோடு எனக்கு நல்ல உறவு உள்ளது. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன். எனக்கு இரு கண்கள் ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்