நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது..!தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி….!தினகரன் அந்தர் பலடி ..!
நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னைக்கடந்த ஆண்டு சந்தித்தாகவும்,செப்டம்பர் மாதம் சந்திக்க தூது விட்டதாகவும் தினகரன் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
இதன் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு சந்திப்பு உண்மைதான் என்றும் கூறினார்.
இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து கூறினார்.அதில் தினகரன் அணியினர் பாஜகவில் சேர தூதுவிட்டனர் என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தினகரன் அணியினர் என்று அவர் சொன்னால் யார் என்று சொல்லட்டும், நான் போனேனா, அல்லது புகழேந்தி போனாரா? அல்லது வேறு யாராவது போனார்களா? அவராக எதாவது சொன்னால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். தமிழிசை யார் என்றே எனக்குத்தெரியாது. தொலைக்காட்சியில் பார்த்ததோடு சரி.நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.