ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக ஆஜராகி பதில் அளித்தார். கடந்த 2 நாட்களாக 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்,2 நாள்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த பின் சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். ஆறுமுகசாமி ஆணையத்திடம் உண்மையான பதிலை அளித்துள்ளேன். நேற்றும் இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் உரிய பதிலை உண்மையான பதிலை தெரிவித்துள்ளேன். நேற்றும் இன்றும் காலை, மாலை என 4 முறை விசாரணையில் பங்கேற்று சாட்சியம் அளித்து உள்ளேன். ஏழு முறை எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இரண்டு முறை சொந்த காரணத்தினாலும், பட்ஜெட்டாலும் வர முடியவில்லை. இரண்டு முறை மட்டுமே சம்மன் பெற்றும் ஆஜராகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 74 நாள்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. முரண்பட்ட பதில்களை எதையும் நான் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. சசிகலா மீதான குற்றசாட்டுகளை நீக்கவே விசாரணை நடத்த கோரினேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.
தெரியாத கேள்விக்கு தெரியாது என்று பதில் கூறி உள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சசிகலா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என தெரிவித்தார்.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…