சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

“கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்.தேமுதிக செயற்குழு ,பொதுக்குழு கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதுதான் இறுதி முடிவு.
அதிமுக கூட்டணியில்தான் பல ஆண்டுகளாக தேமுதிக இடம்பெற்றிருக்கிறது.என்னுடைய ஆதரவை ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தருகிறேன்.சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.சசிகலா வந்த பிறகு மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.எல்லா சாதியும் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.இந்தமுறை தலைவர் விரும்பினால் என் குரல் நிச்சயம் சட்டசபையில் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.