புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன் – கமல்

kamalhaasan NewParliament

குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுள்ளது என கமல்ஹாசன் அறிக்கை.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்து 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்க வேண்டும். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவர். நாடாளுமன்ற புதிய வீட்டின் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும்.

எனவே, தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஜனநாயகத்தை நான் நம்புகிறேன், திறப்பு விழாவை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் பரிசீலினை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்