பணம் அல்ல, மக்களின் மனதை கொண்டு வந்துள்ளேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழ் சங்க நிகழ்ச்சியில் தமிழ் மக்களிடையே பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபுறம் கடந்தகால களஆய்வு, மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என தெரிவித்துள்ளார். 

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ளார்.

அங்கு நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் தமிழ் மக்களிடையே பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபுறம் கடந்தகால களஆய்வு, மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன். தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்து கொண்டிருக்கேன். நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்