பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேர்தல் வரும் வரை காத்திருப்போம்.தேர்தல் வரும்போது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம். கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை கற்றுக் கொண்டேன் .பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…