அரசு வேலை கேட்டு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் – மாரியப்பன்

அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் நம்பிக்கை.
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை தங்கத்தை எதிர்பார்த்து சென்றேன். ஆனால், மழை பெய்ததால் சற்று இடையூறு ஏற்பட்டது.
அதனால், வெள்ளி பதக்கம் வென்றதாக தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன். அரசு வேலை கேட்டு முதல்வர் முக ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். கடந்த 2016ல் என்னுடன் பதக்கம் வென்றவர்கள், ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர்களுக்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு (class one job) வழங்கப்பட்டது.
ஆனால், எனக்கு இதுவரைக்கும் எந்த வேலையும் வழங்கவில்லை. மற்றவர்களுக்கு வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும். அதனால் தான் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதலமைச்சர் நிச்சியம் அரசு வேலை வழங்குவார் என நம்பிக்கை உள்ளது என்று கூறிய மாரியப்பன், நான் வென்ற வெள்ளி பதக்கத்தை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025