நான் 11 அல்லது 12 படங்களில் நடித்துள்ளேன்-முதல்வர் கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
நாளை வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து-திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், தோல்வியை எப்படி தாங்கி கொள்வது என்று தெரியாமல் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். வேலூரில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் .
மேலும் 4 படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டதாக முதல்வர் கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து கூறினார். நான் 11 அல்லது 12 படங்களில் நடித்துள்ளேன் என்று தெரிவித்தார்.