- ஷார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா இந்தியா வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கந்துகொண்டுள்ளார்.
- வேலூர் மாவட்டத்தில் பேசிய அவர் தீவிரவாதிகளாக மாறுவர்களை தாம் வெறுப்பதாக அவர் கூறினார் .
ஷார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் பெண்களுக்கான அதிகாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் இளவரசி ஷெய்கா சிறப்பு விருந்தினராகா கலந்துகொண்டு உரையாற்றினார் .
இதில் பேசிய இளவரசி ஷெய்கா பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய கருவியாக தொழில்நுட்பங்களை பயன்படுகின்றது. வளரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் தாங்கள் விரும்புவதை சாதிக்கலாம் என்று தெரிவித்தார்.நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் கல்வியறிவும் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் தீவிரவாதிகளாக மாறுவதாகவும் அத்தகையவர்களை தாம் வெறுப்பதாகவும் கூறினார்