நேற்று நான் அறிக்கை விடுத்திருந்தேன்.. இன்று இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மகிழ்ச்சி – ராமதாஸ், பாமக

Default Image

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துருந்தார்.

மேலும், உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் அறிவுப்பு வரவேற்கத்தக்கது என்று இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை. உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு.

அதையே தற்போதைய முக ஸ்டாலின் தலைமையிலான அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்