மிகுந்த வேதனை அடைந்தேன்…மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்…முதல்வர் அறிவிப்பு.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், மேலவெளி கிராமம், பரிசுத்தம் நகரைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 56) என்பவர் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு மின்கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” மின்சாரம் தாக்கி உயிரிழந்த திரு.இளங்கோவன் என்பவர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.