மட்டரக அரசியல்வாதிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

மட்டரக அரசியல்வாதிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என  செந்தில்பாலாஜி பேட்டி.

அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது அவரிடம்  செய்தியாளர்கள், ட்சி மாறியதும் நீங்கள் முதலில் கைது செய்யப்படுவீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த  அவர், சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் அவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்த போது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா? இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார்? 143 டாலருக்கு நாங்கள் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளோம். இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது? நிலக்கரி தட்டுப்பாடு இருந்த போது கூட இங்கு தடை இல்லாத மின்சாரம் கொடுத்தோம். பாஜக ஆளும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தனர்.

விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார். வெறும் நான்கு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு பிரதான எதிர்க்கட்சி பாஜக என சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. மட்டரக அரசியல்வாதிகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்