அரசியல் பேச நான் விரும்பவில்லை! யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்

Published by
பாலா கலியமூர்த்தி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மேலும், இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியான சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இதனிடையே, நாட்டில் கொரோனாவுக்கு பிறகு, ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் உத்தரபிரதேசம் சென்றார். அப்போது,  உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தனர்.

இதனைத்தொடர்ந்து, லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு சமூக வலைதங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறியது. சமூக வலைதங்களில் ரஜினி மீது பல்வேறு விமர்சங்களும் முன்வைக்கப்பட்டன. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நடிகர் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் ராணுவ முகாமுக்கு சென்று உரையாற்றினார். தனது இமாலய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது நன்றி.

படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவிப்பதாகவும் கூறினார். இதன்பின், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வயது குறைவானவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய  வழக்கம். நான் அதைத்தான் செய்தேன் என்றார். மேலும், நட்பு ரீதியாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தேன். அரசியல் பேச நான் விரும்பவில்லை எனவும் பதிலளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

1 hour ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

3 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

4 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

4 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

4 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

5 hours ago