நிம்மதியாக என்னை வாழ விடுங்கள் இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை-குமாரசாமி
கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிம்மதியாக என்னை வாழ விடுங்கள் இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை.
அரசியலை விட்டு விலக யோசித்து வருகிறேன். மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும் .மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடந்த 14 மாதங்கள் செயல்பட்டுள்ளேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.