எனக்கு உங்கள் வாழ்த்து தேவையில்லை..! அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா? – காயத்ரி ரகுராம்
அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன் என காயத்ரி ரகுராம் ட்வீட்.
காயத்ரி ரகுராம் பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து கட்சியில் இருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சியில் இருந்து விலகி செல்பவர்களை வாழ்த்தி அனுப்புவது தான் வழக்கம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா? நான் அவருக்கு தைரியம் தருகிறேன். உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும்.
அண்ணாமலை எனக்கு உங்கள் வாழ்த்துகள் தேவையில்லை. உங்கள் மன்னிப்பு மட்டுமே எனக்குத் தேவை. நான் ராஜினாமா செய்ய முடிவெடுப்பதற்கு முன்பு நீங்கள் என்னை ஒருபோதும் வாழ்த்தவில்லை என தெரிவித்துள்ளார்.