நரேன், பட்லர் எந்த பள்ளியில் ஹிந்தி படிச்சாங்கனு தெரியலையே? நடராஜன் பேச்சுக்கு ராஜீவ் காந்தி பதிலடி ..!
ராஜீவ் காந்தி : இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர் திமுக நிர்வாகியான ராஜீவ் காந்தி.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜன் நேற்று சேலத்தில் அவர் பயின்ற ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் பேசினார். அப்போது சில அட்வைஸ்களும் அவர்களுக்கு அளித்தார்.
அவர் அந்த பேட்டியில் தனக்கு ஹிந்தி தெரியாததால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது தனிமையை உணர்ந்ததாகவும், ஹிந்தி மொழி தெரியாததால் பல கஷ்டங்களை சந்தித்தாகவும் மாணவர்களிடம் கூறினார். மேலும், நீங்கள் பயிலும் போதே பிறமொழிகளை கற்று கொள்ளுங்கள் அது உங்களக்கு உதவியாக இருக்கும் என்று பேசி இருந்தார். இதற்கு பலர் நடராஜன் பேசியதை தவறு என்று கூறி அவர்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு கூறியிருந்தனர்.
அதில் திமுக மாணவர் அணி தலைவரான ராஜிவ் காந்தி அவரது எக்ஸ் தளத்தில் நடராஜன் கருத்துக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டு இருந்தார். அவர், “நீங்கள் எப்போதும் எங்களுக்கு தங்கராசு நடராஜன் தான். ஆனால் ஒரு சிலருக்கு நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு நட்டு என்று தான் அழைப்பார்கள். இதே போல ஐபிஎல் தொடரில் விளையாட வருகின்ற வெளிநாட்டு வீரர்களான பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், டிராவிஸ் ஹெட், பட்லர், பில் சால்ட் ஆகியோர் எந்த பள்ளியில் ஹிந்தி படித்தார்கள் என்று தெரியவில்லையே?
அதே போல உங்களுக்கு ஹிந்தி தெரியாததால் தான் தொடர்ந்து தங்களுக்கு இந்திய அணியில் இடம் தரவில்லையா? மேலும், சேலத்தில் அடகு கடை வைத்திருக்கும் சேட்டுக்கு ஹிந்தி நன்றாக தெரியுமே அவர்கள் ஏன் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை” என்று பதிவிட்டு, நடராஜன் கருத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் நடராஜனின் ரசிகர்கள், ராஜீவ் காந்தி கூறிய கருத்தை மறுத்து நடராஜனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.