“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!

நான் பாஜக தலைவராக தொடர்வேனா என்று தெரியாது. ஆனால், அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவி எடுத்துவிட்டு தான் செல்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

TN CM MK Stalin - BJP State president Annamalai

சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

முதலமைச்சரின் பச்சை பொய்

நேற்று அண்ணாமலை பேசுகையில், ” முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார். எண்ணும் எழுத்தும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் தமிழகத்திற்கு PMShri பள்ளிகள் வேண்டுமென்று தலைமை செயலாளர் தான் கடிதம் எழுதுகிறார். PHShri பள்ளிகள் 15,000 கொண்டு வருகிறீர்கள் தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்று எழுதுகிறார். அவர்களே இப்போது வேண்டாம் என கூறுகின்றனர். PMShri திட்டத்தில் குஜராத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1,598 கோடி. அங்கு முதல் தவணையாக ரூ.510 கோடி கொடுத்திருக்கிறார்கள். உத்திர பிரதேசத்திற்கு ரூ.6,900 கோடி ஒதுக்கினார்கள். அதில் முதல் கட்டமாக ரூ.340 கோடி கொடுத்திருக்கிறார்கள். தமிழகம், கேர்ளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத்திற்கு இனி தான் முதல் கட் நிதி வார இருக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.

வாய்க்கொழுப்பு அதிகம்?

மேலும் பேசிய அவர், “முதலமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசுகிறார், ஆளுநரும் இருக்க வேண்டுமாம், அண்ணாமலையும் இருக்க வேண்டுமாம். ஒரு மனிதனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகும் போது. அவனின் அழிவு ஆரம்பமாகிறது என்பது  பொருள். இது ஆணவத்தின் உச்சம். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை, இன்னொரு கட்சி நபர் முடிவு செய்கிறார்?

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும்..,

நீங்க தான் உங்கள் கட்சியில் துண்டு போட்டு வைத்துள்ளீர்கள். நீங்கள், அதன் பிறகு உங்க பையன், அடுத்து உங்க பேரன் இன்பநிதி, அடுத்து ஏதோ ஒரு நிதி வச்சிருக்கீங்க. இந்த கட்சியை (பாஜக) பொறுத்தவரை அப்படி இல்லை. அண்ணாமலை தொடர்ச்சியாக இருக்க மாட்டான். இந்த தலைவருக்கு பின் இன்னொரு தலைவர், என எல்லா தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து தான் இந்த வேலையை செய்வார்கள். அண்ணாமலை இங்குதான் இருப்பான். அறிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை அண்ணாமலை இங்குதான் இருப்பான். ஊழல் பெருச்சாளிகளான 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்கு செல்வதை பார்ப்பதற்கு இந்த அண்ணாமலை இங்குதான் இருப்பான். அதுவரை நிச்சயம் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். ” என கடுமையாக விமர்சனம் செய்தார்.

செருப்பால் அடிப்பார்கள்..,

மேலும் பேசுகையில், ” தமிழகத்தில் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்பது மாற்ற முடியவில்லை என்றால் எப்போதும் மாற்ற முடியாது. அந்த நேரத்திற்கு தற்போது வந்து விட்டோம். எல்லாம் தலைகீழாக குட்டி சுவராக இருக்கிறது. கல்வி முதல் சட்டம் ஒழுங்கு வரை எல்லாம் தலைகீழாக இருக்கிறது. ஆனால், முதலமைச்சர் 23ஆம் புலிகேசி போல் செயல்பட்டு வருகிறார். அவருடன் இரண்டு பேர் இருக்கின்றனர். மாதம் மும்மாரி மழை பொழிகிறது. மக்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொருத்தர். பெண்கள் பாதுகாப்பு இந்த ஆட்சியில் தான் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். இதையெலாம் சொல்லிவிட்டு வெளியில் வந்தால் அவரை செருப்பால் அடித்து விடுவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஓட்டு கேட்டு வெளியே வரத்தான் போகிறீர்கள்.” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.

முதலமைச்சர் பேச்சு :

கடந்த பிப்ரவரி 8-ல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பட்ஜெட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியில் இருக்கும் வரையில் ஆளுநராக ஆர்.என்.ரவியும், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையும் தொடர வேண்டும். அவர்களே நம்மை பற்றி பிரச்சாரம் செய்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்.” என பேசியிருந்தார். இதனை குறிப்பிட்டும் அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price
ceasefire in J&K