சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் 1970-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் படித்த மாணவர்களை சந்தித்து பேசினார். அதேபோல் நேற்றும் இரண்டாம் நாளாக சந்தித்தார்.
இதற்கு இடையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , நீண்ட நாட்களுக்கு பிறகு எனது நண்பர்களை சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு பள்ளித் தோழர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது.
50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சக மாணவர்களை சந்திப்பது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. அவர்களுடன் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டேன், அதுமட்டுமின்றி பள்ளி பருவத்தின் போது வெளியில் சென்றது, ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்தியது , உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம் .இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது நான் படித்த அறையையும் ஏழாம் வகுப்பில் நான் படித்த வரையில் சென்று பார்த்து இன்று அந்த வகுப்புகள் இரண்டும் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி ஆக மாறி இருக்கிறது.
பள்ளியில் ஒரு சில இடங்களில்தான் மாறி இருக்கிறேன். மற்றபடி நான் படித்த போது எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதும் இருக்கிறது. நான் இந்த பள்ளிக்கு துணை முதல்வராகவும், சென்னை மேயராகவும், எம்.எல்.ஏவாகவும் பல முறை வந்திருக்கிறேன்.தற்போது எதிர்க்கட்சி தலைவராக வந்திருக்கிறேன், நாளை எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…