பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றபட்ட நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய நீதிபதி பண்டாரி, பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன். தற்போது, வணக்கம்,நன்றி போன்ற வார்த்தையாகலி கற்றுள்ளேன். தினமும் சில வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள். தமிழகத்தில் பிறக்க வேண்டுமென கனவுகண்டேன். இங்கு பணியாற்றுவதன் மூலம் அந்த கனவி நனவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…