இங்கு நிறைய பேச விரும்பவில்லை, ஆனால் செயலில் காட்டுவேன் – நீதிபதி பண்டாரி

Default Image

பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றபட்ட நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய நீதிபதி பண்டாரி, பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன். தற்போது,  வணக்கம்,நன்றி போன்ற வார்த்தையாகலி கற்றுள்ளேன். தினமும் சில வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள். தமிழகத்தில் பிறக்க வேண்டுமென கனவுகண்டேன். இங்கு பணியாற்றுவதன் மூலம் அந்த கனவி நனவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்