நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை., என்னை மன்னியுங்கள் – ரஜினி வருத்தம்
நாலு பேர் நாள் விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிக்கடா ஆக்க விரும்பவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்து வரும் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது, கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் 3 பக்கம் உடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன். கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறிருந்தார்.
இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாள் விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிக்கடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிரிபார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கு மேமற்றதை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020