எனக்கு சால்வை, பூங்கொத்து, பரிசுப்பொருட்கள் வேண்டாம் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Default Image

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை நெருங்குகிறது. பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறுகிய கால இடைவெளியில் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கி இருந்தாலும், அமமுக தொண்டர்கள் களப்பணி ஆற்றுவதை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன். அம்மாவின் உண்மையான ஆட்சி நாம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் வேளையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்லும்போதும், நான் உள்ளிட்ட கழக முன்னணியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில், விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுகவேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்