நான் வடிவேலு கிடையாது., என்னை சாதாரணமாக நினைக்காதீங்க – கருணாஸ் ஆவேசம்

Default Image

நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, நேற்று நெல்லையில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 12 அம்ச கோரிக்கைகளில், மொழி மற்றும் தமிழ் இனம் சார்ந்த பிரதான 3 கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள், நீங்கள் எந்த சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடுகளை கொடுத்தாலும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த இடஒதுக்கீடு, சாதிகளும் நீங்களோ, நானோ உருவாகவில்லை. இன்றைய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்தவர்கள் பாக்கெட்டில் இருப்பதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கான உரிமையை வழங்குமாறு கேட்கிறோம். சாதாரணமாக ஒரு நடிகரை பார்த்தால் புகைப்படம், கையெழுத்து கேட்க தோன்றும். ஆனால், என்னைப்போல் சிறிய நடிகரை சிறியவர் முதல் பெரியவர் வரை கையெடுத்து வணங்க வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நான் ஜெயலலிதா அம்மையாரை சந்திக்கும்போது, இப்போது இருக்கும் முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆகியோர் இருந்தனர். அப்போது அம்மா அவர்கள் நான் என்னப்பா செய்ய வேண்டும் என்று கேட்டார்.

தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மற்ற சமூகத்தினர் போல் என் சமுதாயமும் கல்வி கற்று அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். இதற்கு பதிலளித்த அம்மா, எப்போது இங்கு நீ வந்தாயோ, அப்போவே அது உனக்கு கிடைத்தாக தான் அர்த்தம் என சொன்னார். இதனை இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அம்மா மறைந்ததால், எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை, என்று சட்டமன்றத்தில் சொன்னவன் நான். ஆதலால், எங்கள் சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு கொடுங்கள் என்று முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

மற்ற சமுதாயம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் நீங்கள், முக்குலத்தோர் சமுதாயத்தின் 26 ஆண்டு கோரிக்கை இது. அம்மா அறிவித்த ஆணை இது. அதை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல். எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல், வேறு யாரு ஒருவருக்கும் அரசாணை வெளியிட்டால், நிச்சியம் தமிழகத்தில் ஒட்டுமொத்த முக்குலத்தோர் வாழுகின்ற பகுதிகள் புரட்சி வெடிக்கும். நாங்கள் புரட்சிக்கு பயந்தவர்களும் அல்ல, உயிருக்கும் பயந்தவர்களும் அல்ல.

2016ல் என்னிடம் அதை தருகிறேன், இதை தருகிறேன் என்று பேசினார்கள். ஆனால் நான் ஒரே வார்த்தை சொன்னேன், அண்ணா தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நான் வடிவேலு கிடையாது, நான் கருணாஸ் சாதாரணமாக நினைக்காதீங்க, எனக்கு தேவை பணம் அல்ல, என்னுடைய பிரச்சனைகளை தீர்ப்பது அல்ல, ஒன்றை மட்டும் வேண்டுகோளாக வைக்கிறேன். வெள்ளை சட்டை போட்டவர்களுக்கு தலைவர் அல்ல, அழுக்கு சட்டை போட்டவர்களுக்கு தான் நான் தலைவன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்