சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்று அறிவித்தது காங்கிரஸ்.கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, சிவகங்கையில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்று அறிவித்தது காங்கிரஸ்.
இந்நிலையில் அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கார்த்தி சிதம்பரம் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ப.சிதம்பரம் குடும்பமே வழக்குகளை பேக்கேஜாக எடுத்துள்ளது.வழக்குகளில் ஜாமீன் பெற அலைபவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? என்றும் கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை. மக்கள் பலத்துடன் வெற்றிபெறுவேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…