ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவில்லை… அவர் மீது மிகுந்த மதிப்பு உள்ளது… அண்ணாமலை.!

Annamalai jeyalalitha

ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவேயில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். அண்ணாமலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு அண்ணாமலை பதில் அளித்து கூறும்போது, எனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நான் எங்கும் ஜெயலலிதா என்ற பெயரை குறிப்பிடவில்லை. ஒரு பெண்ணாக இருந்து தமிழக அரசியலில் அவர் வளர்ந்த விதம் குறித்து நான் பலமுறை பேசியுள்ளேன்.

எனது பேச்சு தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது, தமிழக அரசு ஊழலில் சிக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக ஊழல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதற்கு எனது போராட்டம் தொடரும், அதற்கு தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்