பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அரசியலாக்க முயற்சிக்கவில்லை – இல.கணேசன்
- இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
- பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அரசியலாக்க முயற்சிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட், முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.
ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது:
நேற்று பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டது.இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர் பதற்றம் நீடித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அரசியலாக்க முயற்சிக்கவில்லை. இது நாட்டின் பெருமை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் பாராட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.