கட்சி பார்த்து செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் செய்தேன் – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மணவாளன் நகர் பகுதில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள். வெயில், மழை, இரவு, பகல் எதையும் பார்க்காமல் நாட்டுக்காக உழைத்து, உணவு உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு இன்னல்கள் வரும்போது எல்லாம், தமிழக அரசு அதனை சரி செய்து கொடுக்கிறது என்று உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு என்று குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். நானும் ஒரு விவசாயி, இப்போதும் வேளாண் செய்து வருகிறேன். நான் விவசாயி என்று சொன்னால், முகஸ்டாலின் கோவமடைகிறார். முக ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசும்போது, ரவுடி தான் தன்னை ரவுடி ரவுடி என்று சொல்லிக்கொள்வார்.

அதைபோல், முதல்வர் பழனிசாமி எந்த கூட்டத்திற்கு சென்றாலும் தன்னை விவசாயி விவசாயி என்று கூறிக்கொள்கிறார் என்று ஸ்டாலின் கூறியதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ரவுடியும், விவசாயும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ரவுடி வேறு, விவசாயி வேறு, இது ஒரு கீழ்த்தனமான எண்ணம். எதை பேசுவதென்று கூட தெரியாத தலைவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் என விமர்சனம் செய்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன்.

இதுகுறித்து இன்று பேசிய முக ஸ்டாலின், விவசாயிகள் எல்லாரும் அதிமுகவை சேர்ந்தவர்கள், அதனால் தான் பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று பேசியுள்ளார். ஸ்டாலின் மனக் குழப்பத்தில் இருப்பதால் இப்படி பேசி வருகிறார். கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஸ்டாலின் உணர வேண்டும், பொய்யான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி! 

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

10 minutes ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

57 minutes ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

1 hour ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

2 hours ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

3 hours ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

3 hours ago